வீதியில் தீப்பிடித்து எரிந்த யாழ் – கொழும்பு அதி சொகுசு பஸ்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிசொகுசு பஸ் ஒன்று மதுரங்குளிய, கரிகெட்டப் பகுதியில் தீடிரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் பயணிகள் எவருக்கும் எந்தப் பாதிப்புக்கள் இல்லை. சிலரது உடைமைகளும், பஸ்ஸூம் முற்றாகத் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்தப் பயணிகள் பஸ் நேற்று 29ஆம் திகதி 10.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்தை ஆரம்பித்தது.

பஸ் தீப்பிடித்தபோது அதில் 43 பேர் பயணித்தனர் என்றும், அவர்கள் பின்னர் வேறு பஸ்ஸில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article