வீடு உடைத்து நகைகள் திருட்டு – நெல்லியடியில் 24 வயதுப் பெண் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெல்லியடியில் வீடொன்றில் நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு பிள்ளைகளின் தாயாரான 24 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொன் கந்தையா வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றுமுன்தின்ம்(ஜூன் 16) நகைகள் திருடப்பட்டிருந்தன. வீட்டில் ஆட்கள் இல்லாத சமயம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 80 ஆயிரம் ரூபா பெறுமதியான 6.5 பவுண் நகைகள் திருடப்பட்டிருந்தன.

சம்பவம் தொடர்பில் மாலை 4 மணியளவில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

உடனடியாக விசாரணையில் இறங்கிய கே.விமலவீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஒரு மணித்தியாலத்திற்குள் சந்தேகநபரை கைது செய்து, நகைகளையும் மீட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நெல்லியடிப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Share this Article