2023 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்துக்குள் மேலும் 800 பொருள்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கவனத்தில் கொண்டு இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கு வழங்கிய இலக்குக்கு இணங்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.
அதேவேளை, வாகனங்கள் மீதான இறக்குமதி தடையை தளர்த்துவது, வெளிநாட்டு கையிருப்பில் ஏற்படும் சேதம் காரணமாக இன்னும் சாத்தியமில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்..
நமது வெளிநாட்டு கையிருப்புக்கு மிகக் குறைந்த அளவு சேதத்தை ஏற்படுத்தும் பொருள்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை மட்டுமே நாங்கள் நீக்குவோம்.
இந்த காரணத்துக்காக வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நாங்கள் நீக்க மாட்டோம். நாங்கள் வாகன இறக்குமதியை மறு தொடக்கம் செய்தவுடன், நமது வெளிநாட்டு கையிருப்பில் இருந்து ஆண்டுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் இழக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.