வாள்வெட்டு சந்தேகநபர் பலாலி விமான நிலையத்தில் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு இந்தியாவிட்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த ஒருவர் இன்று (நவம்பர் 3) விமானத்தில் பலாலி ஊடாக நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பித்த முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான 27 வயதுடைய அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை இந்தியாவில் இருந்து விமானம் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த அவரை யாழ். மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்புபிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

Share this Article