நெடுந்தீவு கடற்போக்குவரத்து என்பது நாளாந்தம் மக்கள் சேவைக்கு பிரச்சனையாகவே காணப்படுகின்றது இன்றைய தினம் வாக்களிக்க நெடுந்தீவுக்கு வருகை தந்த மக்கள் மீளவும் திரும்பிச் செல்ல முடியாமால் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றார்கள்.
காலையில் வாக்களிக்க வருகின்ற போதும் குறிகட்டுவான் துறைமுகத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய தேவைப்பாட்டுடன் வருகை தந்து தற்போது நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர் மாலை 4.00 மணிக்கு படகு புறப்படும் எனவும் அதற்காக மக்கள் காத்திருக்கின்றனர்
கடும் காற்றின் மத்தியிலும் வாக்களிப்பு உரிமையினை மேற்கொள்வதற்கு 500 மேலான வாக்களாளர்கள் வாக்களிக்க நேற்றைய தினமும் இன்றைய தினமும் நிறைந்த மக்கள் தொகையினர் வருகை தந்திருந்தனர் மக்களது வருகைக்கேற்ற விதத்தில் அவர்களுக்கான கடற்போக்குவரத்து வசதி செய்து வழங்கப்படவில்லை என்பதனை மக்கள் இன்று தெரிவித்தனர்
நேற்றைய தினம் மாலையில் அலையரசி படகுக்கான அட்டவணை போடப்பட்டபோதும் அப்படகு சேவையில் ஈடுபட்டவில்லை இன்று காலையில் சமுத்திரதேவா படகு சேவையில் ஈடுபடவில்லை அதிகரித்த மக்கள் தொகையினைக் கருத்திற் கொண்டு நெடுந்தாரகைப் படகு ஒழுங்கு செய்யப்பட்டு படகு சேவை இடம் பெற்றது. சமுத்திரதேவா படகு மதிய நேரம் குறிப்பிட்ட சில பயணிகளுடனேயே போக்குவரத்தினை மேற்கொண்டது.
படகுச்சேவைக்கான நேர அட்டவணைகள் போடப்பட்டபோதும் படகு உரிமையாளர்கள் அதனைக் கருத்திற் கொண்டு படகுச் சேவையினை நடாத்தவேண்டும் அதற்கான நிர்வாக நடவடிக்கைகள் சரியாக இடம் பெறவேண்டும்
தேர்தல் காலங்களில் மக்கள் வாக்குகள் கேட்டு வரும் வேட்பாளர்கள் அரசியற்கட்சிகள் நெடுந்தீவில் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் வாக்கு கேட்பதோடு மட்டும் நின்றுவிடாமல் வாக்களிக்க வருகின்ற மக்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வழங்குதல் வேண்டும் என மக்கள் விசனம் தெரிவித்துடன் காலம் காலமாக வாக்களித்து வருகின்றோம் ஆனாலும் எமது றோட்டும் வோட்டும் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்தனர்