வல்வெட்டித்துறை கணபதி மஹால் திருமண மண்டபத்தில் இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

குருதிக்கொடையாளர் சமூகத்தின் அனுசரணையில் வல்வெட்டித்துறை கணபதி மஹால் திருமண மண்டபத்தில் நேற்று (மே 28) 73 ஆவது இரத்ததான முகாம் சிறப்பாக இடம்பெற்றது.

வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்களென 30 பேர் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

Share this Article