வடமராட்சியில் படகிலிருந்து கஞ்சா பொதிகள் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் படகிலிருந்த 50 கிலோகிராம் கஞ்சாவை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர்.

நேற்று (ஒக்ரோபர் 30) அதிகாலை வல்வெட்டித்துறை கடற்கரை ஒரத்தில் அனாதரவாக தரித்து நின்ற குறித்த படகிலிருந்து கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பொலிஸாருடன் இணைந்து கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.

இதன் போது சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article