வடமராட்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் – வடமராட்சியில் பல்வேறு பகுதிகளில் தொடர் மோட்டார் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 5 தண்ணீர் மோட்டார்கள் மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் பல இடங்களில் இடம்பெற்று வந்த தொடர் மோட்டார் திருட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (30.10.2023) இரவு நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 தண்ணீர் மோட்டார்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share this Article