By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வடமராட்சி கிழக்கில் அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு!
Share
Notification
Latest News
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > வடமராட்சி கிழக்கில் அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு!
யாழ்ப்பாணம்

வடமராட்சி கிழக்கில் அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு!

Last updated: 2023/05/02 at 8:37 AM
Published May 2, 2023 237 Views
Share
2 Min Read
SHARE
வடமராட்சி கிழக்கில் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சோதனையின் போது நிறுத்தாமல் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
வடமராட்சிப் பகுதியில் கஞ்சா கடத்தப்டுவதாக விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றிரவு வீதித் தடைகளைப் போட்டு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தானத்திற்கு அண்மித்த பொலிகண்டிப் பகுதியில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது பல வாகனங்கள் மறித்து சோதனையிடப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில்  மணற்காட்டுப் பகுதியிலிருந்து பருத்தித்துறைப் பகுதியை நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை விசேட அதிரடிப்படையினர் சோதனையிடுவதற்காக மறித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினரின் சைகையை உதாசீனம் செய்து வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து பயணிக்க முற்பட்ட டிப்பர் வாகனம் விசேட அதிரடிப்படையினரை மோதித்தள்ளி விட்டு தப்பிக்க முயற்சித்துள்ளது.
இதன்போது டிப்பர் வாகனத்தின் விபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் பாய்ந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தை அவதானித்த விசேட அதிரடிப்படையின் மற்றொருவர் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டனர்.
விசேட அதிரடிப்படையின் துப்பாக்கிச்சூட்டின் போது டிப்பர் வாகனத்தின் பின் சக்கரத்தில் துப்பாக்கி ரவை தாக்கி காற்றுப் போனதில் டிப்பர் நிறுத்தப்பட்டது.
இதன் போது டிப்பரின் பின் பகுதியில் இருந்த இருவர் தப்பித்து சென்றள்ள நிலையில் டிப்பரின் சாரதி கைது செய்யப்பட்டார்.
இதன்பின் டிப்பரை சோதனையிட்ட போது அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மணல் கடத்துவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் டிப்பரையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செர்ய்யப்பட்டு சந்தேகநபரை பருத்துறை நிதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் தப்பித்துச் சென்ற இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவத்தில் படுகாமடைந்த விசேட அதிரடிப்படை வீரர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You Might Also Like

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

Anarkali May 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மே தின நிகழ்வுகள்!
Next Article சஜித்துடன் தொடர்வதற்கு தயாரில்லை! – வடிவேல் சுரேஷ் அதிரடி!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

You Might Also Like

யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?