நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபடும் வடதாரபை; படகின் ஒர் இயந்திரம் இன்றைய தினம் (ஓக்டோபர் 13) செயலிழந்தமையால் மக்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
வழமைபோன்று இன்று மாலை நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி சென்ற சமயம் ஓர் இயந்திரம் பழுதடைந்தமையால் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடமுடியாத நிலைமை ஏற்பட்டது. படகு திருத்துவதற்கான முயற்சியினை கடற்படையினர் மேற்கொண்ட போதும் அது பயனளிக்காமையால் மக்கள் போக்குவரத்து தாமதம் அடைந்தது.
நிலமையினைக் கருத்திற்கொண்டு கரிகரன் தனியார் படகு உரிமையாளர் பொருட்கள் ஏற்றுவதற்காக குறிகட்டுவான் வருகைதந்த தனது படகினை மக்கள் போக்குவரத்திற்கு உடனடியாக மாற்றம் செய்து குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் தரித்திருந்த மக்களை நெடுந்தீவிற்கு அழைத்து சென்றதுடன் தனது மற்றைய படகினை நெடுந்தீவில் இருந்து புறப்பட செய்து ஏனைய பொருட்களையும் கொண்டு செல்வதற்கு உதவி புரிந்தார்.
இது தொடர்பாக உடனடியாக வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு தொடர்பு கொண்ட போது படகு பழுதடைந்தமை தமக்கு தெரியாது எனவும் அது தொடர்பாக விசாரிப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். நெடுந்தீவு மக்களது கடற்போக்குவரத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கே அதிக பொறுப்புக்கள் காணப்படுவதுடன் படகுகள் பழுதடைகின்ற போது உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மாற்று வழிவகைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
வடதாரகைப் படகின் பழுதுடைந்த ஓர் இயந்திரம் திருத்தம ;செய்ய முடியாத நிலையில் நெடுந்தீவு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் போக்குவரத்து பாதிக்காத வகையில் நாளை காலையில் வடதாரகைப் படகு புறப்படும் நேரத்திற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திரதேவா படகு சேவையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.