நெடுந்தீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்ட வடதாரகை படகு திருத்தவேலைகளுக்காக நெடுந்தீவில் இருந்து
நாளையதினம் (08/02) கடற்படை படகு மூலம் இழுத்துச் செல்வதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
அண்மையில் நெடுந்தீவு பிரதேசசெயலர் ந.பிரபாகரன் மற்றும் கடற்படையின் வடபிராந்திய கட்டளை தளபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நெடுந்தீவில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் நெடுந்தீவு – குறிகாட்டுவான் கடற்போக்குவரத்தில் அண்மைக்காலமாக பிரதேச மக்கள், அலுவலர்கள் மற்றும் சுற்றுலாவிகள் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்து பிரதேசசெயலர் தெளிவுபடுத்தியதுடன்
அன்றாட சேவையில் ஈடுபட்டுவந்த வடதாரகை, குமுதினி மற்றும் சமுத்திரதேவா படகுகள் சமகாலப்பகுதியில் சேவையில் ஈடுபடமுடியாத நிலையில் மக்களின் பெரும் இடர்பாடுகளை சந்திப்பதையும் தெளிவுபடுத்தினார்
எனவே இவற்றினை தீர்க்கும் வகையில் வடதாரகையை இயக்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கடற்படை வடபிராந்திய கட்டளை தளபதி நம்பிக்கையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.