வடக்கு மாகாணத்தில் அடுத்துவரும் நாள்களில் கன மழை கிடைக்க வாய்ப்புள்ளது என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி வங்காளவிரிகுடா கடலில் அந்தமான் தீவுக்கு வடக்கே தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளது. இதனால் நேற்று (செப்ரெம்பர் 27) முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளி மிதமானது முதல் கன மழை கிடைக்க வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் கடற்பரப்புக்கள் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.