யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 442 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் இருவர் உட்பட வடக்கில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
இதன்படி யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கும், யாழ்.பருத்துறையை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 8 கைதிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நோயாளியே யாழ்.சிறைச்சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட 1வது கொரோனா நோயாளியாவார். மற்றவர் யாழ்.பருத்துறையை சேர்ந்த ஆசிரியை. குறித்த ஆசிரியையின் வீட்டுக்கு திருகோணமலையிலிருந்து வந்து சென்றுள்ளனா்
அவர்களில் ஒருவருக்கு திருகோணமலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஆசிரியை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் கிளிநொச்சி ஆடை தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் இருநர் கொழும்பு சென்று திரும்பியவர்கள் எனவும் சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளார்.