நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (நவம்பர் 8) அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளதுடன் ரூபாவி்ன பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி ஏற்பட்டு வந்த நிலையில், நேற்றையதினம் திடீரென ரூபாவின் பெறுமதி உயர்ந்தது. எனினும், இன்று மீண்டும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்று நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.79 ரூபாவாகவும், கொள்வனவு விலை 322.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.43 ரூபாவாகவும், கொள்வனவு விலை 232.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 357.88 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 343.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 410.58 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 395.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.