யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் மீளவும் ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மட்டுவிலில் அமைந்துள்ள  “யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம்” மீளவும் இன்று(செப்.30) திறந்து  வைக்கப்பட்டது.

200 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேடபொருளாதார மத்திய நிலையம், 2022 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர்மஹிந்த ராஜபக்ஷவால்  திறந்து வைக்கப்பட்ட போதும் அது பல்வேறுகாரணங்களால் இயங்கவில்லை.

பின்னர்  கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்தலைமையிலான குழுவினரால் மீள திறந்து வைக்கப்பட்டபோதும் அதுவும்செயலிழந்து போனது.

இந்த நிலையில் அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்தவர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்வசந்த சமரசிங்க மீளவும் பொருளாதார மத்திய நிலையத்தை ஆரம்பிக்கநடவடிக்கை எடுத்திருந்தார்.

அதற்கமைய மட்டுவிலில் அமைந்துள்ள “யாழ்ப்பாணம் விசேட பொருளாதாரம்மத்திய நிலையம்” இன்று திறந்து வைக்கப்பட்டது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்  அமைச்சர் இராமலிங்கம்சந்திரசேகர், வர்த்தக வாணிப உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்திஅமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன், யாழ்.அரச அதிபர் ம.பிரதீபன் ஆகியோர் மத்திய நிலையத்தைதிறந்து வைத்தனர்.

Share this Article