யாழ்ப்பாணம் வந்துள்ள இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் நேற்று (மே 23) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன், இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர் ஆகியோர் இன்று காலை யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்றனர்.

அதன் பின்னர் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு ஆளுநருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

பின்னர் 11.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு சென்று யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

குறித்த கலந்துரையாடலில் சமகால விவகாரங்கள், பிரித்தானியாவுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் உடன்படிக்கைகள் பற்றிக் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு வருகைதந்து நூலகத்தினையும் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article