யாழ்ப்பாணம் வந்தடைந்த தொல். திருமாவளவன் – ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சியில் பங்கேற்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்று (நவம்பர் 13) யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் வழியாக இலங்கை வந்தடைந்தார்.

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஏற்பாடு செய்துள்ள ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சியில் பங்கேற்பதற்காக அவர் வருகை தந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நாளை (நவம்பர் 14) ஆரம்பமாகி வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மேலும், தனது வருகையையொட்டி தொல். திருமாவளவன் இன்று முள்ளிவாய்க்காலுக்கு சென்று அஞ்சலி செலுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article