யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் முன்பாக இருந்த பெரும் மரம் முறிந்தது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் ஆட்டோ சாரதி ஒருவர் காயமடைந்து தெய்வாதீனமாக உயிர்தப்பிய சம்பவம் ஒன்று நேற்று (செப்.28) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

யாழ் பொது நூலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள யாழ் மாநகர சபையின் சிறுவர் பூங்காவிற்குள் இருக்கின்ற மரங்களின் கீழ் வீதியால் செல்கின்ற பொது மக்களும் வாகனங்களின் சாரதிகள் என பலரும் நிழலுக்காக தங்கி நிற்பது வழமை.

நேற்றய தினமும் குறித்த மரத்தின் நிழல் பகுதியில் ஆட்டோ சாரதி தங்கி நின்றிருந்த போது அடித்த பலமான காற்றினால் பாரிய மரமொன்று முறிந்து ஆட்டோவின் மேல் வீழ்ந்துள்ளது.

இதில் ஆட்டோ முழுவதும் சேதமடைந்ததுடன் அதன் சாரதி காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Share this Article