யாழ்ப்பாணத்தில் பாணின் விலை குறைப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்தில் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் க.குணரத்தினம் தெரிவித்தார்.

இன்று (ஏப்ரல் 7) முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் வெதுப்பகப் பொருள்களின் விலைகள் குறைக்கப்படாது என்று முன்னதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

கோதுமை மா, நல்லெண்ணெய் மற்றும் முட்டை என்பவற்றின் விலைகள் குறையும் பட்சத்தில் வெதுப்பகப் பொருள்களின் விலைகளைக் குறைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் முன்னர் தெரிவித்திருந்தது.

Share this Article