யாழ்ப்பாண விவசாயிகளால் பயிரிடப்பட்டு அறுவடை செய்த 50 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு கடந்த 10 ஆம் திகதி காலை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கிடைத்துள்ளது.
பாகிஸ்தான், பங்களாதேஸ் நாடுகளிலிருந்து உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டுவந்த நிலையில் இந்த மாற்றம் உள்ளக பொருளாதாரத்துக்கு நல்ல சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது.
உருளைக்கிழங்கு பயிர்செய்கையை யாழ் மண்ணில் புத்துயிர்பெற வைத்து, உற்பத்தியாளர்களை ஊக்குவித்ததன் பலன்கள் இவ்வாறாக அமைவது மகிழ்ச்சி தருகிறது. இத்தகைய செயற்றிட்டங்களை விரிவுபடுத்தி விவசாயப் பொருளாதார தன்னிறைவை யாழ் மண் காணவேண்டும்.
இதற்காக, எமது யாழ் மாவட்ட விவசாயிகளுக்கான எரிபொருள், உரங்கள், கிருமி நாசினிகள் உள்ளிட்டவற்றை தடையின்றி வழங்குவதோடு, விவசாயம்சார் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு முழுமனதோடு முன்வர வேண்டும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.