யாழ்ப்பாணத்திற்கான உள்ளக விளையாட்டரங்கு பழைய பூங்காவில் அமைப்பு!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் யாழ்ப்பாணமாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டரங்கத்தினை யாழ் பழையபூங்காவில் முதற்கட்டமாக 70  மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில்அமைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான முழுமையான மதிப்பீடுகள் தயாரிக்கும்  வேலைகள் நடைபெற்றுவருவதாகவும் யாழ் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும்  உள்ளரங்கில் பயிற்சி பெறாத காரணத்தினால் எமதுயாழ்மாவட்ட வீர வீராங்கனைகள் தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசிக்கமுடியாதநிலைமையிருந்ததாகவும், யாழ்ப்பாணத்தில் உள்ளரங்குஅமைக்கப்படவுள்ளதால் அக் குறை நிவர்த்தி செய்யப்படும் எனவும் அரசாங்கஅதிபரால் தெரிவிக்கப்பட்டது.

விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு  – விளையாட்டுஅபிவிருத்தி திணைக்களத்தின் ஊடக யாழ்ப்பாண மாவட்டத்தில்மேற்கொள்ளப்படவுள்ள விளையாட்டு த்துறை அபிவிருத்தித் திட்டங்கள்  தொடர்பான கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபர்  மருதலிங்கம்பிரதீபன் அவர்களின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (செப்.25) நடைபெற்ற போதே இத்தகவல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article