தனியே யாழ்ப்பாண மாவட்டம் மாத்திரம் வடக்கு மாகாணம் அல்ல. ஆளணிகள் முழுவதையும் யாழ்ப்பாணத்தில் வைத்திருக்க முடியாது. ஏனைய 4 மாவட்டங்களுக்கும் யாழ். மாவட்டத்திலிருந்தே ஆளணிகளைப் பங்கீடுசெய்யவேண்டியுள்ளது. அந்தப் பங்கீட்டை உரியவாறு முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார்.
வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (ஒக்.22) மாலை நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் கூறுகையில்…..
கடல் கடந்த தீவுகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு ஆபத்துக்கொடுப்பனவை, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு திணைக்களத்தில் பணியாற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனஆளுநர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டம் மட்டும் வடக்கு மாகாணம் இல்லை- வடமாகாண ஆளுநர்.
அத்துடன் தகுதியில்லாத திணைக்களத் தலைவர்கள் அல்லது பணியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான இடமாற்றங்கள் அல்லது நடவடிக்கைகள் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதேவேளை, ஆளணி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்போது தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு சேவைப் பிரமாண குறிப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சுச் செயலாளர்களைமேற்கொள்ளுமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஒவ்வொரு பணியாளரதும் தனிப்பட்ட கோவைகள் உரிய காலத்துக்குகாலம் இற்றைப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், பணியாளர்ஒருவர் ஓய்வுபெற்று ஒரு மாத காலத்தினுள் அவருக்கான ஓய்வூதியம்கிடைக்கப்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்வலியுறுத்தினார்.
இதேவேளை, கடந்த காலங்களில் பிழையான ஒன்றைச் செய்து வந்தால், அந்தப் பிழையைத் தொடர அனுமதிக்குமாறே சில தொழிற்சங்கங்கள்கோருகின்றன எனக் குறிப்பிட்ட ஆளுநர், அதனைத் திருத்த முற்பட்டால்தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என எச்சரிக்கின்றனர். மக்களின்வரிப்பணத்தை வீணடிப்பது தொடர்பில் அவர்கள் கவலைப்படுவதாகத்தெரியவில்லை. ஆனால், இதில் மாற்றத்தை ஏற்படுத்த அதிகாரிகள்இறுக்கமான நடவடிக்கை எடுத்தேயாகவேண்டும் என ஆளுநர்வலியுறுத்தினார்.