யாழ் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாகஇலாபமடைந்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கதெரிவித்தார்.

கடந்த மாதம் 85 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில்இலாபமடைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரட்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நிபுணத்துவ திட்டமிடலுக்கு அமைய யாழ்ப்பாணம் விமான நிலையத்தின்அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுமே தவிர அரசியல்வாதிகளின்நோக்கங்களுக்காக அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில்மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்காக 2025 ஆம் ஆண்டுஒதுக்கப்பட்ட நிதியில் 2025.09.21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 150 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை விரிவுப்படுத்துவதற்கானகாணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு அபிவிருத்தி பணிகள் பாதுகாப்புஅமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது.

ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் கேள்விகளை கேட்பதுபொருத்தமானதாக அமையும் என அமைச்சர் பிமல் ரட்நாயக்க மேலும்தெரிவித்துள்ளார்.

Share this Article