யாழில் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்டநபரொருவரின் வீடு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.
குறித்த சோதனை இன்று (ஒக்.22) அதிகாலை நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்டதேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முலவைச் சந்தி அருகில் உள்ளவீடொன்றிலேயே குறித்த சோதனை நடத்தப்பட்டது.
அண்மைக்காலத்தில் இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில்தனது பிறந்த நாள் கொண்டாட்ட காணொளியை பதிவேற்றம் செய்தமை, சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபரின்வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
குறித்த நபர் வீட்டில் இல்லாத நிலையில் அங்கு இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குஉட்படுத்தப்பட்டுள்ளதுடன் , இரண்டு மோட்டார் சைக்கிள்கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசாரின் தகவல்கள் வெளியாகியுள்ளன.