மாவட்ட அனர்த்த அபாயத்தை ஏற்படுத்தக் கூடிய மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுதல் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்டபதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை(ஜூன்06) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட பதில் அரசாங்க அதிபர்அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின்அறிவுறுத்தலுக்கு அமைவாக தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை தாக்கத்தைஎதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கையாக கிடைக்கப்பெற்றசுற்றுநிருபத்தின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய 15 பிரதேசசெயலாளர் பிரிவிலும் முழுமையாக அகற்றப்பட வேண்டியமரங்கள்,பகுதியளவில் கிளைகள் அகற்றப்பட வேண்டிய மரங்களின் தகவல்களைபிரதேச ரீதியாக பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் 63 கிராமசேவையாளர்கள் பிரிவிலும் 60 மரங்கள் முழுமையாக அகற்றப்படவேண்டிய தேவை இருப்பதாகவும் 85 மரங்கள் பகுதியளவில் கிளைகள்அகற்றப்பட வேண்டியிருப்பதாகவும் பிரதேசசெயலாளர்கள்தெரிவித்திருந்தனர்.
பிரதேச செயலாளர்களை தலைமையாக கொண்ட அந்த குழுவினருக்குமரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதோடுமுழுமையாக அகற்ற வேண்டிய மரங்களை பிரதேசசெயலாளர்கள் நேரில் சென்றுபார்வையிட்டு அந்தமரங்கள் உண்மையாக அழிக்கப்படவேண்டியதேவைஉள்ளதா?என்பதை உறுதிப்படுத்திய பின் அந்த மரங்களை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீண்டகால பழமை வாய்ந்தமுக்கியத்துவம் மிக்க மரங்களை அகற்ற வேண்டிய தேவைகள் இருப்பதாயின்அவை மாவட்ட குழுவினருக்கு சமர்ப்பிக்கப்பட்டு மாவட்ட குழுவின் தீர்மானத்தின்அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்
இக் கலந்துரையாடலில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்பணிப்பாளர்T.N.சூரியராஜா, மற்றும் பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.