யாழ்மாவட்ட அரசாங் அதிபர் மதிப்பிற்குரிய திரு.செ.மகேசன் அவர்கள் இன்று காலையில் நெடுந்தீற்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளர் கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் ஏனைய விடயங்கள தொடர்பாகவும் இவ் விஜயததின் போது கண்காணிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடற்படையினரின் படகு உதவியோடு காலை 10.00 மணிக்கு முன்னர் நெடுந்தீவிற்கு சமுகம் தரவள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைய நிலைமையில் நெடுந்தீவு வாழ் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்துள்ளார்கள் நேற்று இரவு 12.30 மணி வரை மழை தொடர்ச்சியாக பெய்த வண்ணம் உள்ளதோடு இன்னும் நீர் சரியான முறையில் வடிந்தோடவில்லை. கடந்த இரண்டு நாட்களாக மின்சாரமும் காலநிலை சீர்pன்மையால் தடைப்பட்டுள்ளது.
அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள், நெடுந்தீவு மக்களது போக்குவரத்து வசதிகள், பிரதான வீதி திருத்தம், வைத்தியசாலை வசதிகள், மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பாக நெடுந்தீவு சமூக மட்ட அமைப்புக்கள் பிரதேச செயலருடன் தொடர்பினை ஏற்படுத்தி மாவட்ட அரசாஙக அதிபருக்கு பிரச்சனைகளை கொண்டு செல்கி;ன்ற போது தீர்வுகள் கிடைப்பதற்கான சாத்தியபாடுகள் காணப்படும்
ஒரு அனர்த்த நிலைமையேற்பட்டு சரியான முறையில் நிவர்த்தி செய்யப்படாத இக்காட்டன சூழ்நிலையில் நேரடியாக நெடுந்தீவிற்கு விஜயத்தினை மேற்கொண்டு களவிபரங்கi பார்வையிட வருகின்ற மாவட்ட அரசாங்க அதிபரது செயற்பாடு வரவேற்கத்தக்கது.