யாழ் மாநகரசபைக்கு முன்னால் தனிநபர் உண்ணாவிரதம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்னால் தனிநபர் ஒருவர் இன்று காலை(ஏப்ரல் 19) முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்று உள்ளதாகவும் அந்த கட்டிடத்தின் கழிவு நீர் தன்னுடைய வீட்டிற்குள் வருவதாகவும் இதனை மாநகரசபையிடம் பல்வேறு தடவைகள் முறையிட்டும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்து அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
குறித்த நபருடன் யாழ்மாநகரசபை அதிகாரிகள் கலந்தாலோசித்தபோதும் அவர் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
Share this Article