யாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் சஜித் பிரேமதாஸ!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் (பெப்ரவரி 23) காலை 9 மணியளவில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் வருகை தந்து  பல்வேறு நிகழ்சிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு அனலைதீவிலும், மாலை 2 மணிக்கு  சண்டிலிப்பாயிலும், மாலை 4 மணிக்கு வட்டுக்கோட்டை மூளாயிலும், மாலை 5 மணிக்கு அளவெட்டி கும்பலையிலும், மாலை 06.30 மணிக்கு றக்கா வீதியில் அமைந்துள்ள இளங்கதிர் சனசமூக நிலைய விளையாட்டுத் திடலிலும் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டங்களில் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளவுள்ளார்.

Share this Article