யாழ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இலவச சீருடை,பாடப்புத்தகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
யாழ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இலவச சீருடை துணி மற்றும் இலவச பாடப்புத்தகம் வழங்கும் வேலை திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்புடன் நேற்று (மார்ச் 29) ஆரம்பிக்கப்பட்டது.
சீன அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ், இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற இலவச சீருடை துணி பாடப்புத்தகம் வழங்கும் வேலைத்திட்டம் வடக்கு மாகாணத்தில் உள்ள  பாடசாலைகளிலும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு சீருடை வழங்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
யாழ் மத்திய கல்லூரியில், கல்லூரியின் அதிபர் இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ரி.ஜோன் குயின்ரஸ், யாழ்ப்பாண வலய  கல்விப்பணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடை வழங்கினர்.
Share this Article