யாழ் பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19) மாலை 4.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்ற இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட செயலாளர் கலந்து சிறப்பித்தார்.

பிரதேச செயலக ஊழியர்களை நான்கு இல்லங்களாக பிரித்து போட்டிகள் கடந்த ஒரு மாதமாக இடம்பெற்றது.

முதல் இடத்தை நெய்தல் அணியும், இரண்டாம் இடத்தை முல்லை அணியும், மூன்றாம் இடத்தை குறிஞ்சி அணியும் பெற்றுக் கொண்டது.

மேலும் இந்தப் போட்டிகளின் கனவான் விருதை நெய்தல் அணி தனதாக்கிக் கொண்டது.தொடர்ந்து அனைத்து தனிப்பட்ட மற்றும் குழு விளையாட்டுக்களிலும் பங்கு பற்றி வெற்றியீட்டிய வீர வீராங்கணைகளுக்கான வெற்றிக் கிண்ணங்கள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

Share this Article