யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அரசாங்கத்தின் வரிக் கொள்கையை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தால் நேற்று (மார்ச் 9) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்ச் 15ம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும், தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Share this Article