யாழ் பல்கலை மாணவர்களுக்கு உணவு வழங்குவோரிடம் திடீர் சோதனை..!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு விநியோகிப்பவர்களிடம் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவுகளை வெளிநபர்கள் விநியோகித்து வருகின்றனர்.

உணவு வழங்குவோர் சுகாதார நடைமுறைகளை பின் பற்றுவதில்லை என முறைப்பாடுகள் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து நேற்றைய தினம் (30/04)  இரவு விடுதிக்கு உணவு விநியோகிக்கும் நபர்கள் , அவர்கள் விநியோகிக்கும் உணவு தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் போது , சில குறைப்பாடுகள் காணப்பட்ட நிலையில் , அவற்றை விரைவில் நிவர்த்தி செய்யுமாறும் , தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பரிசோதகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share this Article