யாழ். நகர வீதியில் வாள்களுடன் சிக்கிய வன்முறைக் கும்பல் – பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடம் இருந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இரு குழுக்கள் மோதலுக்குத் தயாராகியுள்ளன என்று பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டக் விசேட குற்றத் தடுப்புப் பிரிவு உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

வீதியில் இரு குழுக்கள் மோதலுக்குத் தயராக இருந்த நிலையில், ஒரு குழுவைச் சேர்ந்த ஐவரே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றைய குழுவைச் சேர்ந்தவர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 தொடக்கம் 25 வயதுடையவர்கள் என்றும், அவர்களிடம் இருந்து இருவாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share this Article