யாழில் வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்த ஓட்டோ!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இன்று(ஒக்ரோபர் 29) மதியம் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியே வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்கு அருகில் பாய்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முச்சக்கரவண்டியில் சாரதி உள்ளிட்ட ஐவர் பயணித்த நிலையில், அதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பெண்களும் ஒரு குழந்தையுமே விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article