யாழில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 29 பேர் கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கசிப்பு உற்பத்தியுடன் தொடர்புடைய29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 14 முதல் 20 வரையிலான காலப்பகுதியில் பொலிஸாரினால்முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, சட்டவிரோதப் பொருட்களைவைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாகயாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து

45 போத்தல்கள் கசிப்பு , 90 லீட்டர் கோடா , கசிப்பு காய்ச்சுவதற்குப்பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், அனுமதியற்ற சாராயம் மற்றும் பல்வேறுவகையான போதைப்பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 29 பேரில், 11 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன் ஏனையோர் நீதிமன்றத்தின் ஊடாகச் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும்நோக்குடன், பொலிஸாரின் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைதொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் யாழ்ப்பாணப் பொலிஸ்தலைமையகம் அறிவித்துள்ளது.

Share this Article