யாழில் போக்குவரத்து சிக்கல், சிறு குற்றங்கள் என்பவற்றை தவிர்க்கும் வகையில் விசேட சேவை ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் சிறு குற்றங்கள் என்பவற்றை தவிர்க்கும்வகையில் விசேட சேவை ஒன்று யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சகர் ஜெயமஹா தலைமையில் சம்பிரதாய பூர்வமாக யாழ்ப்பாணம்பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்று (ஒக்.21) ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த சேவையை பெற்றுக்கொள்ள 021-2222221  என்ற அவசரதொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பெடுத்து பொதுமக்கள் முறையிடுவதன்மூலம் பொலிஸார் குறித்த பகுதிக்கு விரைந்து வந்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள எந்த பகுதியில் இருந்தும்குறித்த இலக்கத்திற்கு அழைப்பெடுத்து முறையிட்டால் அந்தந்த பகுதிபொலிஸ் நிலையங்கள் ஊடாக பொது இடங்கள் மற்றும் போக்குவரத்துக்களின்போது ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக உடனடி தீர்வை பெற முடியும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article