யாழில் இன்று முதல் டெங்கு நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்.மாவட்டத்தில் டெங்கு நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம், இன்று (ஓகஸ்ட் 14)  முதல் 20 ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்படவுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் மழைக்காலத்திற்கு முன்பாக நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில்,நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தில் டெங்குநுளம்பு களையெடுப்புச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் யாழ்.மாவட்டத்தில் விசேட மாகத் தெரிவு செய்யப்பட்ட மற்றும் கிராம அலுவலர் பிரிவு ரீதியான களத்தரிசிப்புக்க ளில்,சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேசசபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் என அனைத்துத் தரப்பினரும் இணைத்து குறித்த நுளம்புக் கட்டுப்பாட்டு வாரவேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article