யாழில் தனக்கு தானே தீ வைத்து 29 வயது இளம் தாய் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மூன்று பிள்ளைகளின் தாய் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விரத்தியடைந்து தனக்குதானே தீ வைத்து எரிகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இச் சம்பவத்தில் வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த கர்ணிகா குமரன் வயது 29 என்ற மூன்று பிள்ளைகளின் இளம் தாய் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த பெண்ணுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளும் அதில் கடைசி பிள்ளைக்கு 11 மாதங்கள் ஆன நிலையில் இந்த துயரசம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article