யாழில் சீனாவின் சினோபெக் ஒயில் வகை இன்று அறிமுகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சீனாவின் சினோபெக் ஒயில் நிறுவனத்தின் இலங்கையின் ஏக விநியோகஸ்தர் இன்டர்நஷனல் லுப்ரிக்கட் பிறைவெட் லிமிட்டட் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் தனது ஒயில் வகையை இன்று(ஒக்ரோபர் 24) அறிமுகம் செய்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கான தனது யாழ்.விநியோகஸ்தராக கோல்ட் மவுன்ட் பிறதர்ஸ் பிறைவட் லிமிட்டட் என்னும் நிறுவனத்தினை இன்று  செவ்வாய்க்கிழமை  மானிப்பாயில் ஆரம்பித்துள்ளது.

இந்த நிகழ்வில் பங்குதாரர்களான பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜயசாந்த தொட்டஹேவகே, தேசிய விற்பனை முகாமையாளராக துசிதகுமார, விற்பனை முகாமையாளர் எம்.குகன் விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன்  சைனோபெக் எரிபொருள் விற்பனை முகாமையாளர்கள் வாகன திருத்துநர்கள் வாகன உதிரிப்பாக விற்பனையாளர்கள் பொது மக்கள்  எனப் பலர் கலந்துகொண்டனர்.

சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் திருநெல்வேலி, பருத்தித்துறை, கோப்பாய் மற்றும் இயக்கச்சிப் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Share this Article