யாழில் குழந்தை பிறந்து 20 நாட்களேயான தாய் தற்கொலை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தவறான முடிவெடுத்து தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று நேற்று(ஒக்ரோபர் 2) யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் பதிவாகியுள்ளது.

40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகளின் பின்னர் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள போதும், தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன அழுத்தத்தில் அவர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன் தயான் அன்ரலா மேற்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article