யாழில் ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தை விருது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
திருவள்ளுவர் குறள்களை கூறி அதற்கு விளக்கம் கொடுத்த ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தை எனும் விருது வழங்கி வைக்கப்பட்டது.
உருத்திரசேனையின் ஏற்பாட்டில் திருவள்ளுவரின் திருவுருவ பட வெளியீடு நேற்று (மார்ச் 26) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் இடம்பெற்றபோதே இவ் விருது வழங்கப்பட்டது.
நிகழ்வில் சிறுவன் அருணனின் திருவள்ளுவரின் ஆதங்கம் எனும் கருப்பொருளில் திருவள்ளுவர் குறள் மற்றும் அதன் விளக்கம் என்பன எடுத்துரைத்துக்காட்டப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராஜா  கலந்து கொண்டு சிறுவனை பாராட்டினர்.
Share this Article