யாழில் இன்று முதல் பால் தேநீர்,பரோட்டா விலை குறைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
யாழ் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை( ஏப்ரல் 8) முதல் தேநீர், பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விற்பனை விலையில் இருந்து 10 ரூபா விலை குறைத்து விற்க உணவக உரிமையாளர்களால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் வணிகர் கழகத்தில் நேற்று மாலை உணவக உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உணவு நிலையங்களுக்கு ஏற்ப விலைகளில் வேறுபாடு காணப்படுவதால் அந்தந்த விலைகளில் இருந்து 10 ரூபா குறைத்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதுவருடத்துக்கு பின்னர் உணவுப்பொதிகள், வேறு உணவுப்பண்டங்கள் தொடர்பான விலைகள் தொடர்பாக முடிவெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
Share this Article