யாழம்மா இணையத்தளம் நடாத்தும் மாபெரும் இலக்கியப்போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
2 Min Read

யாழம்மா இணையத்தளம் மாபெரும் இலக்கியப்போட்டியினை நடாத்தவுள்ளது. இணையத்தளத்தின் புதிய விரிவாக்கத்தின் வெளியீட்டினையொட்டி மாபெரும் இலக்கியப் போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வயது எல்லை: 20 வயதுக்கு மேற்பட்டோர்.

கவிதைப் போட்டி

– இயற்கைச் சூழல்

– உயிர்கொல்லி

– தமிழர் பண்பாடு

– அறிவியல் வளர்ச்சி

– மனித விடுதலை

– எங்கள் பெரியார்கள்

ஆகிய கருப்பொருள்களின் கீழ் பொருத்தமான தலைப்புக்களையிட்டு 20 வரிகளுக்கு மேல் ஆக்கங்கள் அமைதல் வேண்டும்.

பரிசு விபரம்

1 ஆம் இடம் – 30000.00 ரூபா பெறுமதியான பணப்பரிசில்.

2 ஆம் இடம் – 20000.00 ரூபா பெறுமதியான பணப்பரிசில்.

3ம் இடம் – 15000.00 ரூபா பெறுமதியான பணப்பரிசில்.

முதல் 10 வெற்றியாளர்களிற்கு ஆறுதல் பரிசாக
தலா 5000.00 ரூபாய் வழங்கப்படும்.

சிறுகதைப் போட்டி

– மனித நுண்ணுணர்வுகள்

– புலர்பெயர் வாழ்வு

– அகதி வாழ்க்கை

– போரும் தமிழரும்

– சாதியக்கொடுமை

– தமிழரும் உலகமும்

– பெண்ணியம்

ஆகிய கருப்பொருள்களின் கீழ் பொருத்தமான தலைப்புக்களையிட்டு 2000 சொற்களுக்கு மேல் சிறுகதை அமைய வேண்டும்.

பரிசு விபரம்

1 ஆம் இடம் – 50000.00 ரூபா பெறுமதியான பணப்பரிசில்.

2 ஆம் இடம் – 40000.00 ரூபா பெறுமதியான பணப்பரிசில்.

3 ஆம் இடம் – 30000.00 ரூபா பெறுமதியான பணப்பரிசில்.

முதல் 10 வெற்றியாளர்களிற்கு ஆறுதல் பரிசாக தலா 5000.00 ரூபாய் வழங்கப்படும்.

பொதுவான போட்டி விதிமுறைகள்

@ ஆக்கங்கள் போட்டியாளரின் சுயமான படைப்புக்களாக இருத்தல் வேண்டும்.

@ போட்டிக்கான ஆக்கங்கள் அனைத்தும் தட்டச்சு செய்து மின்னஞ்சல் (mail) அல்லது புலனம் (what’s up) மூலம் PDF வடிவில் அனுப்ப வேண்டும்.

@ ஆக்கங்களை அனுப்பும் போது தலைப்பு, பெயர், முகவரி, வயது, தொலைபேசி இலக்கம் என்பவை தெளிவாகத் தட்டச்சு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

@ ஆக்கங்கள் அனுப்பும் இறுதி நாள் – 15.11.2023

@ முடிவுகள் அறிவித்தல் – 31.12.2023

@ அனைத்துப் போட்டி விதிகளும் எதுவித சமரசமும் இல்லாமல் கண்காணிக்கப்படும்.

@ குறிப்பிட்ட முடிவுத்திகதிக்குப் பின் கிடைக்கும், தெளிவற்ற ஆக்கங்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய ஆக்கங்கள் என்பன கவனத்திற் கொள்ளப்படமாட்டாது

@ நடுவர் குழாமின் முடிவே அறுதியும் இறுதியுமானது.

@ அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பங்குபற்றல் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஆக்கங்களை அனுப்புவதற்கான

மின்னஞ்சல்: info@yazhamma.com
தொடர்புகளுக்கு -0764114615

Share this Article