மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து நேற்று மாலை(செப்ரெம்பர் 5) இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் வெருகல் – இலங்கை துறைமுகத்துவாரத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சந்திரராஜ் கஜேந்திரராஜ்  என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

வெருகல் கோயிலில் விசேட வழிபாட்டிற்கு தனது தாய் மற்றும் தம்பி ஆகியோரை கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது இவ்விபத்து இடம் பெற்றதாகவும் தெரிய வருகின்றது.

Share this Article