நெடுந்தீவை சேர்ந்த ஊடகவியலாளர் நாகேந்திரர் லட்சுமண ராஜா இன்று (10 நவம்பர்) வியாழக்கிழமை யாழ் மருத்துவமனை காலமானார்.
ஊடகவியலாளர் , கவிஞர் , எழுத்தாளரான “நெடுந்தீவு லக்ஸ்மன்” என அழைக்கப்படும் நாகேந்திரர் லட்சுமண ராஜா நெடுந்தீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர், தொல்பொருள் திணைக்களத்தின் ஓய்வு நிலை உத்தியோகத்தரும் ஆவார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் மற்றும் தேசிய பத்திரிகைகள் என்பவற்றிலும் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றியுள்ளார்.
அன்னாரின் பூதவுடல் இலக்கம் 30 நிக்கிலாஸ் லேன், கச்சேரி நல்லூர் ரோட், யாழ்ப்பணம் எனும் முகவரியில் மக்களின் ஆஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தகனம் கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்