வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு இன்று (மார்ச் 14) முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலகங்களில் நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் , கரைதுறைப்பற்று பிரதேச செயலகங்களில் நடைபெற்ற உதவி வழங்கும் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சுப்ரமணிய ஐயப்பா மற்றும் கனடா கியுபெக் அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் அனுசரணையுடன் வாழ்வாதார வசதிகளில் பின்னடைவை சந்தித்திருக்கும் மக்கள் மற்றும் கற்பிணி தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த நிவாரண உதவி வழங்கப்பட்டது.
10 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த திட்டத்தில் 100 பயனாளர்களுக்கு கோழிக்குஞ்சுகளும் 160 பயனாளர்களுக்கு வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக விதைதானியங்கள், பசளை வகைகள் என்பன வழங்கப்பட்டன.