முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல்!- சுயாதீன விசாரணை கோரும் சஜித் பிரேமதாஸ!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் விலகியமைக்கான காரணம் தொடர்பில், சுயாதீன விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(ஒக்ரோபர் 3) நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு சில தரப்பினரால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உத்தரவை மாற்றியமைக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

இது, நீதிமன்றின் சுயாதீன தன்மையை பாதிக்கும் விடயமாகும். அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் குறித்து, வெளிப்படுத்தப்பட வேண்டும்.

எனவே, அரசாங்கம் இதுதொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share this Article