முன்னாள் தவிசாளரின் வீட்டில் தற்கொலை முயற்சி செய்த பெண் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

வலி. வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளரின் வீட்டிற்கு முன்னால் நேற்று (ஏப்ரல் 16) பெண்ணொருவர் தற்கொலைக்கு முயற்சித்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஏப்ரல் 17) உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண், நேற்றிரவு முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு முன் வந்து, தனக்குத் தானே தீ மூட்டியுள்ளார்.
தீ அணைக்கப்பட்டதையடுத்து கிணற்றினுள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அந்தப் பெண் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வலி. வடக்கு பிரதேச சபையில் பணியாற்றும் உத்தியோகத்தர் என்பதுடன், கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகின்ற நிலையில் அவருக்கு 10 வயதில் பிள்ளை ஒன்றுள்ளது.

இந்த பெண்ணுக்கும் முன்னாள் தவிசாளருக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் அதன் காரணமாக நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸார் முன்னாள் தவிசாளரை வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article