முதியோருக்கான தேசிய செயலகத்தின் திரிய பியச வீடமைப்புத்திட்டம் 2021 எனும் நிகழ்சித்திட்டத்தின் கீழ் மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட நிலையில் வாழும் முதியோர் குடும்பம் ஒன்றிற்கு வீடுகட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றையதினம் (நவம்பர் 02) பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றது.
ரூபாய் 300,000.00 பெறுமதியில் அமைக்கப்படும் இவ் வீடமைப்புத்திட்டத்தின் ஆரம்பமாக யாழ் மாவட்டத்தில் முதன் முலாக நெடுந்தீவு பிரதேச செயலகத்திலேயே இந் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு பிரதேச செயலகர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்களது தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் முதியோருக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் கே.ஜி லெனரோல் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன், முதியோருக்கான தேசிய செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், கிராம சேவையாளர் மற்றும் முதியோர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.