நெடுந்தீவு மக்களது கடற்போக்குவரத்து தொடர்பாக மக்கள் பல்வேறு விமர்சனங்களையும் கருத்துக்களையும் சொல்லுகின்ற போதும், மக்களது இயல்பான போக்குவரத்துக்கான வழி வகைகள் மேற்கொள்ளப்படுவது கடினமாகவே காணப்படுகின்றது.
தற்போது வடதாரகை படகுச் சேவை நிறுத்தப்பட்டதன் பின்னர் வடதாரகை நேரத்திற்கு தனியார் படகுகளே போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றன படகு நேர அட்டவணை போடப்பட்டபோதும் சில வேளைகளில் படகுகள் குறித்த நேரத்தில் சேவையில் ஈடுபடுவதில்லை.
ஞர்யிற்றுக்கிழமைகளில் குமுதினிப்படகுச் சேவையும் இடம் பெறாமையால் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் அதிகரித்த பயணிகள் வருகின்ற போது இரண்டாவது படகுச் சேவையினை ஒழுங்கு படுத்தி வழங்க வேண்டிய பொறுப்பு வாய்ந்தவர்கள் தயவாக மக்கள் போக்குவரத்தில் கரிசணை செலுத்த வேண்டும் என மக்கள் கேட்டு நிற்கின்றனர்
நேற்றைய தினம் (ஆகஷ்ட் 30) ஞாயிற்றுகிழமை காலை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான சமுத்திரதேவா படகில் 180ற்கு அதிகமான பயணிகள் பிரயாணம் செய்துள்ளதை அவதானிக்க முடிந்தது
மிகுந்த பயத்தின் நிமித்தமும், அவசரமாக பிரயாணம் செய்ய வேண்டிய தேவையின் நிமித்தமாகவும், பிரயானம் செய்கின்ற மக்களது போக்குவரத்துக்கு உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்
எதிர்வரும் நாளை (ஓக்டோபார் 01) தொடக்கம் படகு அட்டவணை போடப்படுகின்ற போது அட்டவணை நேரத்திற்கு படகு புறப்பட வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்துவது அவசியமாகும்